வாஸ்கோ : ‛காங்., கட்சியை பிரதமர் மோடி அழிக்க நினைக்கிறார்' என தேசியவாத காங்., கட்சியின் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார்.
கூட்டணி இல்லை:
கோவா மாநிலம், வாஸ்கோவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று சரத் பவார் பேசியதாவது: மஹாராஷ்டிராவில், பா.ஜ., - சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது; பா.ஜ., அரசுக்கு தேசியவாத காங்., ஆதரவளிக்கும் என்பது பொய்யான தகவல். பா.ஜ.,வினர் திட்டமிட்டு, இந்த வதந்தியை பரப்புகின்றனர்; மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
காங்.,க்கு குறி:

இதனைத் தொடர்ந்து, பனாஜியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது சகஜம். அதற்காக, பிற கட்சிகளை முழுவதுமாக முடக்க நினைப்பது சரியல்ல. பிரதமர் மோடியின் உரைகளை கவனிக்கும்போது, காங்., கட்சியை அவர் அழிக்க நினைப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.