Total Pageviews

இஸ்லாமாபாத் பிரதேசத்தின் கழிவகற்றலில் பங்கெடுக்குமா?

Written By We Are Anonymous on Wednesday, January 25, 2017

இஸ்லாமாபாத் பிரதேசத்தின் கழிவகற்றலில் பங்கெடுக்குமா? கல்முனை மாநகர சபை
(செய்தி: ஏபீஎம்.றிணோஸ், புகைப்படம்: கே.றிஸ்கான்)

கல்முனை மாநகர எல்லைக்கு உட்பட்ட, இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அதிலும் குறிப்பாக கல்முனை வலயக் கல்வி அலுவலகம், இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம் மற்றும இஸ்லாமாபாத் தொடர்மாடி ஆகியவற்றின் முன்பாகக் காணப்படும் வீதி எங்கும் குப்பைகள் நிறைந்ததாகவும் அதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெறிவிக்கின்றனர்.
பலநாட்கள் கழிந்தும் அக்குப்பைகள் அகற்றப்படாமையினால் அவ்வழியாக பாடசாலை செல்லும் மாணவர்கள் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இன்னும்;, அவ்விடம்; நாய்கள், மாடுகளினால் அசிங்கப்படுத்தப்பட்டும் வருகின்றது.
எனவே, மேற்படி விடயத்தில் கல்முனை மாநகர சபை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.