Total Pageviews

அதிகம் பொரித்த உணவுகளை உட்கொள்பவரா நீங்கள்?

Written By We Are Anonymous on Tuesday, January 24, 2017

கிழங்கு வகைகளை கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துண்ணல்   மற்றும் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் கருகவிடப்படும் உணவுகள் உண்ணுதல் என்பன புற்றுநோயை ஏற்படுத்துமென புதிய மருத்துவ ஆய்வியல் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 

அதிகளவான மக்கள் வெப்பத்தில் நீண்ட நேரம் வறுத்த உணவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். அது குறித்து உணவு தர நிர்ணய நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ஆய்வில் பொன்னிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’ எனப்படும் இரசாயன பொருளின் அளவு அதிகரிக்கிறது. குறித்த இரசாயணம்  புற்றுநோயை ஏற்படுத்துமென கூறியுள்ளனர்.
அதிவெப்பத்தில் நீண்ட நேரம் பொரித்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம். மாறாக அவிந்த உணவுகளை உட்கொண்டு உடல்நலத்தை பேணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.