Total Pageviews

21 பில்லியன் டொலர் செலவில் உருவாகவுள்ள அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைச் சுவர்...

Written By We Are Anonymous on Sunday, February 12, 2017

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் திட்டத்திற்கு சுமார் 21 பில்லியன் டொலர் செலவாகும் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தச் சுவரை நிர்மாணிக்கும் பணிகள் சுமார் மூன்றரை வருட காலங்கள் நீடிக்கும் என்றும், சுவர்கள் மட்டுமல்லாது, இடையிடையே முட்கம்பி உட்படப் பலதரப்பட்ட வேலிகளும் அமைக்கப்படும் என்றும் தெரியவருகிறது. 

சர்ச்சைக்குரிய சுவர் நிர்மாணம் பற்றி தனது தேர்தல் பிரசாரத்தின்போது குறிப்பிட்ட ட்ரம்ப், இதற்காக சுமார் 12 பில்லியன் டொலர்கள் செலவாகும் என்று அறிவித்திருந்தார். ஆனால், தற்போது இதற்கான செலவு சுமார் பத்து பில்லியன் டொலர்கள் அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

குறித்த எல்லைப் பகுதியின் ஒட்டுமொத்த நீளமான சுமார் 2000 கிலோமீற்றர்கள் நீளத்துக்கு இந்தச் சுவர் அமைக்கப்படும் என்றும் தெரியவருகிறது.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.