” 30 – 02 – 2017 ” கோர்ட்டில் ஆஜராகுக – கொழும்பு ட்ராபிக் பொலீஸ், ஆட்டோக்காரருக்கு “தடகொல” கொடுத்து அதிரடி
Written By We Are Anonymous on Tuesday, February 28, 2017
இலங்கை போக்குவரத்து பொலிஸாரின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக முழுமையபொலிஸ் துறை மீதும் அதிருப்பதி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை குற்றம் சுமத்தும் வகையிலான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. கிரான்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் கசுன் என்பவர் பொரளையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவர் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக பொலிஸார் அவரை நிறுத்தியுள்ளனர். குற்றச்சாட்டிற்கு அபராதம் தாள் வழங்கி பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெப்ரவரி மாதம் 30ஆம் திகதியை குறிப்பிட்டுள்ளனர். பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் 30 ஆம் திகதி நீதிமன்றம் செல்வது எப்படி என்பதே தற்போது அனைவரினதும் கேள்வியாகியுள்ளது.
” 30 – 02 – 2017 ” கோர்ட்டில் ஆஜராகுக – கொழும்பு ட்ராபிக் பொலீஸ், ஆட்டோக்காரருக்கு “தடகொல” கொடுத்து அதிரடி
2017-02-28T03:11:00-08:00
We Are Anonymous
Local News|






