Total Pageviews

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டது..

Written By We Are Anonymous on Saturday, February 11, 2017


இஸ்ரவேல் முன்னெடுத்து வரும் சட்ட விரோதமான குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி, இஸ்ரவேலினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இதுபோன்ற சகல நடத்தைகளையும் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையினால் கொண்டுவரப்பட்ட 2334 ஆம் இலக்க பிரேரணைக்கும் பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பலஸ்தீன் பிரதேசத்தில் இஸ்ரேலினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குடியேற்றங்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இஸ்ரேலின் சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட 2334 ஆம் இலக்க பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய 14 நாடுகளில் ஐக்கிய இராஜ்ஜியமும் ஒன்று எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.