பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஒரே அறையில் சசிகலாவும், இளவரசியும்
Written By We Are Anonymous on Wednesday, February 15, 2017
பெங்களூரு : சிறையில் முக்கிய பிரமுகர்களுக்கு தரப்படும் வசதி ஏதும் சசிகலாவுக்கு அளிக்கப்படவில்லை. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை உள்ளிட்ட நோய் உள்ளதால் சசிகலாவுக்கு கட்டில் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சசிகலா, இளவரசிக்கு தலா ஒரு போர்வையும் வழங்கப்பட்டும் என சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. நீதிபதியிடம் கோரிக்கை இளவரசியையும் தம்மையும் ஒரே சிறை அறையில் அடைக்குமாறு நீதிபதியிடம் சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். யாருடன் யாரை அடைப்பது என்பது குறித்து சிறை அதிகாரியே முடிவு செய்வார் என சசிகலாவின் கோரிக்கைக்கு நீதிபதி பதில் அளித்தார். பின்னர் சசிகலா கோரிக்கையை ஏற்று இருவரையும் ஒரே அறையில் அடைக்க சிறை அதிகாரி உத்தரவிட்டார். சிறை அதிகாரி உத்தரவை அடித்து சசிகலா, இளவரசி ஒரே அறையில் அடைக்கப்பட்டனர். சிறை உனவு விவரம் சிறையில் காலை 7 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணி என 3 வேலை உணவு தரப்படும். காலையில் 2 சப்பாத்தி,1/4 லிட்டர் சாம்பார், 100 மி.லி. காபி, 200 மி.லி. மோர் தரப்படும். பகலில் 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டை, சாம்பார் வழங்கப்படும். மாலையில் கலவை சாதம் வழங்கப்படும் என சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஒரே அறையில் சசிகலாவும், இளவரசியும்
2017-02-15T06:36:00-08:00
We Are Anonymous
India News|






