Total Pageviews

கஞ்சாவும் அபினும் சாஞ்சாடும் பூமி

Written By We Are Anonymous on Monday, February 13, 2017

கஞ்சாவும் அபினும் சாஞ்சாடும் பூமி கொஞ்சம் நெடுப்பம்தான் முடிஞ்சா வாசிங்க அஸ்ஸலாமு அலைக்கும் கல்முனை 03 தொடக்கம் கல்முனைக் குடி 14 வரையான கல்முனை முஸ்லிம் பிரிவுக்குட்பட்ட கரையோரச் சுனாமி காவுகொண்ட எச்சத்தில் கஞ்சாவுடன் குடும்பம் நடத்தும் கேடுகெட்ட பிறப்புகளைப் பற்றிய ஓர்பார்வையே இதுவாகும். கல்முனைக் குடி கரையோர வீதியில் சுமார் 06 பல கொள்கைப் பள்ளிவாசல்கள் சுமார் 2 கிலோமீற்றர்களுக்குள் உள்ளது ஒவ்வொரு பள்ளிவாசல்களும் அதிலுள்ள அறிஞர்கள் என அழைக்கப்படுகின்ற மௌலவிமார்களும் தங்களின் கொள்கையைத் தக்கவைத்துக்கொள்ள படாத பாடு பட்டுக்கொண்டு போதாக்குறையாக ஆளுக்கொரு புரஜக்டர்களுடன் படம் காட்டியும் இதுவரைக்கும் போதையை ஒழிக்கவோ கஞ்சாவை அழிக்கவோ முடியவில்லையெனின் காரணம் என்ன பொதுமக்களாகிய நாம் சற்று சிந்திக்க வேண்டாமா? மார்க்ச் சண்டை பிடிக்க மாத்திரமா நீங்கள் இஸ்லாத்தைக் கற்றுக்கொண்டது? அல்லது மிம்பர் மேடைக்கு பாரமேற்றவா? மாலை 6 மணிமுதல் கல்முனை 03 கடற்கரைச் சந்தியிலிருந்து ஆரம்பியுங்கள் உங்கள் பிரயாணத்தை முதலில் உங்கள் மூக்கைத் துளைக்கும் கஞ்சா வாசம் அச்சந்தியின் ஆரம்பத்திலேயே அடுத்து வரும் செயிலான் வீதிச் சந்தியில் வாசச் செறிவு அதிகமாகி உங்களையே போதையேற்றும். இவ்வாறு ஒவ்வொரு சந்தியும் கஞ்சாச் சங்கதி கூறும் உங்களுக்கு. இதைமாற்ற முடியாதா! அதன் தீர்வுதான் என்ன? இந்த ஆறு பள்ளிவாசல்களும் ஒருங்கிணைந்து உங்கள் கொள்கைகளை இவ்விடயத்திற்காக சற்று தூரமாய் வைத்துவிட்டு ஒற்றுமையுடன் செயற்படமுடியாதா? முடியும் இருந்தாலும் எமக்குள் ஒற்றுமையில்லை காரணம் எம் ஊரை நிர்வகிப்பது உலமாஉக்கள் அல்ல சண்டியர்களாக அலைந்து திரியும் கஞ்சா வெறியர்களே அதனால்தான் இன்றும் சமூக ஒற்றுமையின்றி கலைந்து கிடக்கின்றோம். இந்த ஆதங்கம் உலமாஉக்களான உங்களை மாற்றிவிட வாய்ப்பில்லை ஏனெனில் குர்ஆன் ஹதீஸை விடவா இப்பிரசுரம் வலிமையானது இல்லையே இருந்தபோதும் ஒரு நப்பாசை யாராவது ஒருத்தராவது சிந்திக்கவேணும் என்பதுதான். வீதிக்கு பத்து இளைஞர் கழகங்களும் சமூக சேவை மன்றங்களும் உள்ளன அவற்றின் சேவை என்ன புரட்டிப்பார்த்தால் வருடத்திற்கொருதடவை மீலாது விழா, இரு பெருநாட்களிலும் ஈத் முபாரக் பெனர், மிஞ்சிப் போனால் இரத்த தான முகாம் இதை விட சமூகத்திற்காய் வேறென்ன சாதித்திருக்கிறது. முகாமைத்துவம் செய்ய வேண்டிய பள்ளிவாசல்கள் அனைத்தும் வெறும் தொழுகைக் கூடங்களாக மாத்திரம் செயற்படுவதும் ஒரு சிறந்த தலைமத்துவம் சமூகத்தை வழிநடத்த தவறியமையுமே இந்த சீர்கெட்ட நிலமைக்கு முக்கிய காரணங்களாகக் காணமுடிகிறது. எமது இளைஞர்களின் இன்றைய நிலை என்ன கஞ்சா அபின் மாஆ என பல வகையான போதைக்கு அடிமையாகி வாழ்வை சீரழித்துக்கொள்கின்றனர். இதற்கு யார் காரணம் பணக்கார வேடத்திலும் நல்லவர்கள் என்ற கோலத்திலும் உலாவரும் கஞ்சா வியாபரிகள் என்பதை நம்மால் உணர முடியாத மாயைக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இனிவரும் காலத்திலும் வாழப்போகிறோம் என்று தனது சொந்தப்பிள்ளை போதைக்கு அடிமையாகுதோ அன்றுதான் எம் பணப் போதை தெளியும்
thazeem mohammed ibnu jabbar



Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.