Total Pageviews

*எமது ஆசிரியர் சமூகத்தை வீதிக்கு இறக்கிய கல்முனை வலய கல்விப் பணிமனை கல்வியாளர்கள்*

Written By We Are Anonymous on Wednesday, February 22, 2017






*எமது ஆசிரியர் சமூகத்தை வீதிக்கு இறக்கிய கல்முனை வலய கல்விப் பணிமனை கல்வியாளர்கள்*
 எம் சமூகத்தில் பல கல்வியாளர்களை அறிவில் குறைவின்றி உருவாக்கிய எமது ஆசாண்களின் சம்பள நிலுவகள் மறுக்கப்படுவதன் மர்மம் என்ன? வீதியில் இறங்கி ஆசிரியர், ஆசிரிகைகள் தன் நிலுவை கொடுப்பணவுக்காக போராட்டம் செய்ய களம் அமைத்துக் கொடுத்த கல்முனை வலய கல்வி நிர்வாகிகளின் பாரபட்சமான செயற்பாடுகளை கிழக்குமாகாண சபை கல்வி மந்திரி மற்றும் முதலமைச்சர் உடணடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். மாறாக அலுவலக கதவுகளை மூடி விட்டு உள் இருந்து இந்த ஆசிரியர் சமூகத்தின் தன்மானத்தையும், சுதந்திர தொழிற்சங்க குரலையும் மலினம்படுத்துவதன் மர்மம் என்ன? எனவே ஆசாண்கள் கொடுக்கப்பட்ட அவகாச கால எல்லைக்குள் இந்த சம்பள நிலுவை தீர்கப்படாவிட்டால், தொடர்ந்து நிலுவைப் பணம் கபளீகரம் செய்யப்பட்டால், மாணவர்களின் பெற்றோர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் "கல்முனை கல்விப் பணிமனை முற்றுகை போராட்டம்" என்ற ஆர்பாட்ட-பேரணி ஒன்றை முழு நாளும் ஏற்படுத்த வேண்டி வரும் என எச்சரிக்கின்றேன்........ "கல்முனை கல்வி வலய நிர்வாகிகளே! நீங்களும் ஆசாணாய் புறப்பட்டு இன்று உயர் அதிகாரியாய் உங்கள் பேனாவுக்கு வலு சேர்த்துள்ளீர்கள், அந்த வலுவை பாதுகாப்பது உங்களின் கடமையல்லவா?" ஒரு அலுவலகத்தின் கதவுகளை, அலுவலக நேரத்தில் இழுத்து மூடி வைப்பது கல்வியாளர்களின் ஜனநாயகமா? இது "பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோக சட்டக் கோவைக்குள்" இச் செயலை நீதிமன்றம் கவணத்திற்கு பெற்றோர்களால் கொண்டு செல்ல முடியாதா?
 ஜுனைடீன் மான்குட்டி,


Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.