கையால் எழுதபட்ட டிக்கட்டுகளுடன்,
Written By We Are Anonymous on Friday, February 24, 2017
பாகிஸ்தானிலிருந்து சவுதிஅரேபியாவிற்கு 7 பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து, சவுதிஅரேபியாவிற்கு பயணித்த, பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை (பிஐஏ) நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில், எவ்வாறு 7 பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என விசாரணைகளை நடத்தி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கராச்சி நகரிலிருந்து மதீனா வரையான பயணத்தில், குறித்த விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஏழு பயணிகள் விமானத்தில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளதுள்ளனர். குறித்த பயணிகளுக்கு விமான ஊழியர்கள் கையால் எழுதப்பட்ட பயண சீட்டுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கையால் எழுதபட்ட டிக்கட்டுகளுடன்,
2017-02-24T23:59:00-08:00
We Are Anonymous
World News|






