Total Pageviews

சாத்தானின் குழந்தையென பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை ( காணொளி இணைப்பு )

Written By We Are Anonymous on Saturday, February 4, 2017

நைஜிரியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஹோப் சாத்தானின் சந்ததி எனக் கூறி பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் குற்றுயிராய் டென்மார்க் சமூக ஆர்வலர் ஒருவரால் மீட்கப்பட்டு இன்று மிகவும் ஆரோக்கியமுள்ள குழந்தையாக பாடசாலைக்கு செல்கின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்தவரும் தற்போது ஆபிரிக்காவில் வசித்து வரும் அன்ஜா ரிங்ரின் லோவன் என்பவரது மீட்புக் குழு நைஜீரியாவுக்கு சென்றுள்ளது. அப்போது பரிதாப நிலையில் இருந்த குழந்தையான ஹோப்பைக் கண்ட லோவன் தன்னிடம் இருந்த தண்ணீரை அந்த குழந்தைக்கு ஊட்டியுள்ளார்.
குழந்தை ஹோப் மீது பரிதாபம் கொண்ட அவர், குழந்தையின் அந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை அங்கிருந்த மக்களிடம் இருந்து கேட்டறிந்தார். சிறுவனை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க உடனடி நடவடிக்கை எடுத்தார். உடனடியாக ஹோப்பிற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இரத்த சிவப்பணுக்கள் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தினசரி இரத்தம் மாற்றுதல் என பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
குறித்த செயலை லோவன் தன்னுடைய சமூகவலைத்தில் பதிவேற்றம் செய்தார். ஹோப்பை சமூகவலைத்தளங்களில் கண்ட அனைவரும் மிகவும் அனுதாபப்பட்டனர். அதைத் தொடர்ந்து இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் ஹோப்பிற்கு உதவுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பலர் உதவிக்கு பணம் அனுப்பினர். இந்த வகையில் ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதைத் தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு பின்னர் ஹோப் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதையடுத்து, லோவன்  குழந்தைகளின் தொண்டு நிறுவனமான ஆபிரிக்க குழந்தைகள் உதவி கல்வி மற்றும் அபிவிருத்தி மன்றத்தில் ஹோப்பை இணைத்து விட்டார்.
தற்போது ஹோப் நல்ல உடல் தகுதி பெற்று பாடசாலைக்கு சென்று விட்டதாக தெரிவித்த புகைப்படத்தை லோவன் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அன்று சாத்தானின் சந்ததி என பெற்றோரால் கைவிடப்பட்ட ஹோப் இன்று உலக மக்கள் உதவியுடன் நல்ல நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.