வெகு விரைவில் மூடப்படுகிறதா? மத்தள விமான நிலையத்தின் இன்றைய நிலை இதுதான் பாருங்கள்.
Written By We Are Anonymous on Tuesday, February 14, 2017
சென்ற அரசாங்கத்தால் வெகு அமர்க்களமாக திறக்கபட்ட மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் இன்றைய நிலை அனைவரும் அறிந்ததே. விமானங்களின் வருகை இன்மை, பயணிகள் அசெளகரியம், வருமானமின்மையை தொடர்ந்து தற்போது கிடைக்கும் தகவல்களின் படி குறிப்பிட்ட விமான நிலையம் அதன் மிக இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதா என எண்ணத் தோன்றுகின்றது.. காரணம் இதுதான், தற்போது அந்த விமான நிலையத்தின் ஊடாக இரண்டே இரண்டு விமான சேவைகளே இயங்குகின்றது. ஒன்று FlyDubai. கொழும்பில் இருந்து மத்தளயில் தரித்து அங்கிருந்து துபாய் செல்கின்றது. தினமும் ஒரு தடவை இந்த சேவை நடைபெறுகிறது. அடுத்தது, Rotana Jet விமான சேவை, இந்த விமானம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விட்டு ஒருநாள் கொழும்பில் இருந்து மத்தளயில் தரித்து அங்கிருந்து அபுதாபி செல்கிறது. மொத்தமாக சுமார் 45 விமான சேவைகள் மட்டுமே இந்த சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இவ்விரண்டு விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விமான நிலையத்தை நடத்துவதற்கு தினமும் அதிகளவான பணம் செலவாகும் அதேவேளை எந்தவித வருமானமும் இல்லை. (அங்குள்ள சுங்கத்துறைக்கே கடந்த நான்கு மாதமாக எந்த வருமானமும் இல்லை) இந்த நிலையில் தினமும் ஒருமுறை மத்தளை ஊடாக இயங்கிக்கொண்டிருக்கும் Fly Dubai விமான சேவை இம்மாதம் 25ஆம் திகதிக்கு பிறகு மத்தளை ஊடாக செல்வதில்லை என தம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அவர்களின் ஒப்பந்தம் அத்திகதியில் காலாவதி ஆகிறது. இலங்கை விமான சேவை அமைச்சும் இந்த ஒப்பந்தத்தை நீடிக்க விருப்பம் காட்டவில்லை என மேலும் தெரிய வருகிறது. மேலும் ஒருநாள் விட்டு ஒருநாள் மத்தள ஊடக இயங்கும் Rotana Jet விமான சேவையும் இங்குள்ள சேவைகுறைபாடு, (transport, accommodations (hotels) healthcare services மற்றும் நேர விரயத்தை கருத்தில் கொண்டு விரைவிலே தன் சேவையை நிறுத்தவுள்ளதாக தெரிய வரும் அதேவேளை,International Air Transport Association குறிப்பிட்ட விமான நிலையத்தை இதுவரை Standard international airport ஆக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலை காரணமாக இவ்விமான நிலையத்தின் களஞ்சிய சாலை உட்பட மற்ற தேவைகளுக்கு சில காலத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள அதேவேளை விமான சேவைகள் இன்றி அத்தொகுதிகள் விரைவில் மூடப்பட வாய்புகள் அதிகரித்துள்ளது.
வெகு விரைவில் மூடப்படுகிறதா? மத்தள விமான நிலையத்தின் இன்றைய நிலை இதுதான் பாருங்கள்.
2017-02-14T09:19:00-08:00
We Are Anonymous
Local News|






