பன்னீர் செல்வம் ஆவேச பேட்டி... பலவந்தமாக ராஜினாமா கடிதம் கொடுக்க வைத்தார்கள்.
Written By We Are Anonymous on Tuesday, February 7, 2017
ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடம் முன்பு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இந்த தியானம் நீடித்தது. இதனால் மெரீனாவில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் , செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தகுதியுள்ள யாரை வேண்டுமென்றாலும் முதல்வராக நியமிக்கலாம். அது நானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கட்சியை பாதுகாக்க தன்னந்தனியாக போராடுவேன்” என்றார்.
பன்னீர் செல்வம் ஆவேச பேட்டி... பலவந்தமாக ராஜினாமா கடிதம் கொடுக்க வைத்தார்கள்.
2017-02-07T12:15:00-08:00
We Are Anonymous
India News|






