Total Pageviews

பாலாறு ஓடவைத்த முகாமையாளர் கைது

Written By We Are Anonymous on Friday, February 17, 2017

டிக்கோயா பகுதியில் இயங்கும் பால் சேகரிப்பு நிலையத்தின் முகாமையாளரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பால் சேகரிப்பு நிலையத்திலிருந்த பால், இன்று அதிகாலை காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றில் கலந்து பாலாறாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றம் வீசுவதனாலேயே முகாமையாளரை பொலிஸார் கைது செய்தனர். டிக்கோயா, தரவளை பகுதியில் இயங்கும் பால் சேகரிப்பு நிலையத்திலிருந்த பாலே ஆற்றில் கலந்திருப்பதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் குறித்த பால் சேகரிப்பு நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, பால் சேகரித்து வைத்திருந்த பால் தாங்கி தவறி விழுந்ததால் பால் கொட்டியதாக தெரிவிக்கின்றனர். சுமார் 2000 லீற்றர் பால் இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் காசல்ரீ நிர்தேக்கமும் டிக்கோயா ஆற்றுப்பகுதியிலும் பால் கலந்துள்ள நிலையில் துர்நாற்றம் வீசுவதுடன், நீர் மாசடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபரை கைது செய்த ஹட்டன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.