Total Pageviews

இஸ்லாத்துக்கு எதிராக ஆர்பாட்டம் செய்ய வந்த பெண். பதாகைகளை வீசிவிட்டு ஆரத்தழுவி அல் குர்ஆனை பெற்றுக்கொண்ட நிகழ்வு. #islam

Written By We Are Anonymous on Thursday, February 2, 2017

அமெரிக்காவின் மிச்சிக்கன் பள்ளிவாசலுக்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பு பதாகைகளுடன் தனித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்ணை எதிர்பார்க்காத வகையில் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர் கட்டுத் தழுவியதை அடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் முஸ்லிம்களுடன் நட்புப் பாராட்டியது பலருக்குஅதிர்ச்சியை அதேவேளை ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இஸ்லாமிய வன்முறைக்கு எதிராக கடந்த ஞாயிறன்று பள்ளிவாசலுக்கு வெளியில் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் ஒன்றுதிரள திட்டமிட்டபோதும் ஒரு பெண் மாத்திரமே எதிர்ப்பு பதாகைகளுடன் எஞ்சியிருந்தார்.
அப்போதே பர்தா அணிந்த முஸ்லிம் பெண், ஏனைய ஆதரவாளர்களுடன் அங்கு வந்து குறித்த பெண்ணை கட்டித் தழுவிக்கொண்டார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட விவாதத் திற்கு பின் அவர் பள்ளிவாசலுக்குள் வர விருப்பம் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பெண் பள்ளிவாசலுக்குள் செல்வதை பார்த்து அங்கு காவலுக்கு வந்த பொலிஸாரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
கர கோசத்துடன் பள்ளிவாசலுக்கு வரவழைக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு காலை விருந்துபசாரமும் வழங்கப்பட்டது. எனது கணவன் மற்றும் போதகர் எதிர்ப்பு வெளியிட்ட நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இங்கு வந்ததாக குறிப்பிட்டிருக்கும் அந்த பெண், தான் இப்படி ஒரு அனுபவத்தை சந்திப்பேன் என நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். போராட்டத்தின் பொது..
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.