Total Pageviews

இலங்கை போதைப்பொருள் வியாபாரிக்கு கட்டார் நீதிமன்றம் கொடுத்த தண்டனை.

Written By We Are Anonymous on Sunday, March 5, 2017

 கட்டாரில் உள்ள இலங்கை பிரஜை ஒருவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதித்து டோஹா குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோதமாக போதைப்பொருள் விநியோகித்தல் மற்றும் பாவனை என்ற குற்றச்சாட்டில் அடிப்படையிலேயே இலங்கை பிரஜைக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு காரணமாக அபராதப் பணமாக 200,000 ரியால் செலுத்துமாறும் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் குருதிப் பரிசோதனை மேற்கொண்ட போதும் அவர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.