Total Pageviews

இலங்கை ரூபா மதிப்பில் 16 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச்

Written By Mihrajnews on Thursday, September 28, 2017

இலங்கை ரூபா மதிப்பில் 16 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான இந்த நபர் சிங்கப்பூரில் பொறியியலாளராக பணிப்புரிந்து வருபவர் என விமான நிலைய சுங்க பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.