*****************************************************
கல்முனை பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் தேவைகளை பொறுத்து சுமார் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
பிரதமரின் ஆலோசனையின் பேரில் நிதியமைச்சினால் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(31) கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் பிரதி அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றோஸன் அக்தார்,எம்.எஸ்.எம் நிசார்,ஏ.சீ சாத்தார்,ஏ.எம்.பைறோஸ்,மஸூறா குழு தலைவர் அல்ஹாஜ் யூ.எல்.காசிம்(கரீம்),கல்முனை 12ம் வட்டார வேட்பாளரும் பிரிலியண்ட் விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிகப்பாளர் எம்.எஸ் பளிழ்,கல்முனைக்குடி-03 கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் அல்ஹாஜ் ஏ.பி ஜவ்பர் உட்பட அனைத்து பள்ளிவாசல்களின் தலைவர்கள்,செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் சமகால அரசியல் சார்ந்த விடயங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி விடயங்கள் என பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. 31.08.2018












