தாமே ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற விரும்புவதாக டிராவிட் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு பல்கலைக்கழகம் அறிவித்திருந்த டாக்டர் பட்டத்தை பெற ராகுல் டிராவிட் மறுத்துள்ளார். இந்திய அணியின் பெருஞ்சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் நின்றால் அது எதிரணி பவுலர்களுக்கு மனதளவில் பலவீனத்தை கொடுத்துவிடும். இந்திய அணிக்கு தூணாக நின்று பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர் டிராவிட். தவிர, அணியை பல நேரங்களில் தோல்வியில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றவர்.






