2 மாதங்களில் 201 இஸ்லாமிய அடிப்படை வாதிகள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர்..
Written By We Are Anonymous on Thursday, February 9, 2017
கடந்த இரண்டு மாத காலத்துக்குள் இஸ்லாம் அடிப்படை வாதிகள் 201 பேர் சட்டவிரோதமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த செவ்வாயன்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நிமல் ரணசிங்கவிடம் இது தொடர்பில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். குறித்த நிகழ்வில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் குழுக்களால் எதிர்நோக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக, அமெரிக்கா உட்படப் பல நாடுகள் தமது நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்களை வலுவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்கள் தளர்வாக உள்ளமையால், அடிப்படை வாதிகளுக்கு இலகுவாக இலங்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த தேரர், சட்டங்களை கடினப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2 மாதங்களில் 201 இஸ்லாமிய அடிப்படை வாதிகள் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர்..
2017-02-09T10:44:00-08:00
We Are Anonymous
Local News|






