Total Pageviews

அணிக்கு திரும்பியுள்ள லசித் மலிங்கவின் அதிரடி பேட்டி.

Written By We Are Anonymous on Thursday, February 9, 2017



ஒன்றறை ஆண்டுகளுக்கு பின் இலங்கை டி20 அணிக்கு திரும்பியுள்ள நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்கா அதிரடி பேட்டியளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசிய மாலிங்க கூறியதாவது, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள பயிற்சிப் போட்டியில் சிறந்த முறையில் பந்துவீசினால் போட்டித் தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இந்தநிலையில் பயிற்சிப்போட்டியில் சிறந்த முறையில் பந்து வீசி வெல்வதே முதலாவது இலக்காகவுள்ளது கடந்த 3 , 4 மாதங்களாக நல்லதொரு பயிற்சியை மேற்கொண்டுள்ளேன். மறுபடியும் எனக்கு தலைமைப்பொறுப்பு கிடைக்குமென்றால் நான் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன். அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நாம் விளையாடுவது எந்த அணியுடன் என்றில்லாது எதிரணியுடன் உத்தேவகத்துடன் விளையாடினால் போட்டியை வெற்றி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.