Total Pageviews

பிஞ்சுக் குழந்தையைப் பலாத்காரம் செய்து, கொன்று, எரித்தவன்!

Written By We Are Anonymous on Thursday, February 9, 2017

அந்தப் பிஞ்சுக்கு ஏழு வயதுதான் நடக்கிறது. தனியார் பாடசாலையில் 2ம் ஆண்டு படிக்கும் அவளது பெயர் ஹாசினி. சென்னை போரூர்க்குப் பக்கத்திலுள்ள முதலிவாக்கம் பகுதியில், மாங்காடு மதனபுர நிகிதா அடுக்கு மாடிக் குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த ஹாசினி திடீரெனக் கடந்த 5ம் திகதி காணாமற் போனாள். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், சொப்ட்வெயார் நிறுவனமொன்றில் பணிபுரியும் முப்பத்தைந்து வயதான ஹாசினியின் தந்தையான பாபு, மாங்காடு போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் மும்முரமாக இயங்கினர். அடுக்கு மாடிக் குடியிருப்புக்குப் பக்கத்திலிருந்த தனியார் பாடசாலையின் சிசிடிவி காமராவைப் பரிசோதித்துப் பார்த்தனர். அதன் மூலம் குழந்தை குடியிருப்பை விட்டு வெளியே எங்கும் போகவில்லை என்பதை முதற்கட்டமாக ஊர்ஜிதம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் ஜஸ்வந்த் என்ற 22 வயது இளைஞன் நடந்து கொண்ட முறையை வைத்து அவன் மேல் பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மீண்டும் சீசீடிவி கேமராக்களை போலீசார் துல்லியமாகப் பரிசோதித்தனர். அதில் ஜஸ்வந்த் குழந்தை ஹாசினியை அழைத்துக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் பின்னர் ஜஸ்வந்த்தைத் தமது பாணியில் போலீசார் விசாரித்தனர். மெக்கானிக்கல் எஞ்சினியரான ஜஸ்வந்த் தொழில் நுட்பத் துறையில் நல்ல பதவியிலிருப்பவன். நீண்ட நாட்களாகவே சிறுமி ஹாசினியின் மீது அவனுக்கு வெறி இருந்து வந்திருக்கிறது. சம்பவ தினம் அவன் ஹாசினியிடம் கடையில் புதிய செருப்புகள் வாங்கித் தருவதாக ஆசை காட்டி அழைத்துச் சென்றிருக்கிறான். பின்னர் ஒரு மறைவிடத்தில் வைத்துச் சிறுமி மீது பலாத்காரம் புரிந்திருக்கிறான். சிறுமி பெருங்குரலில் சத்தமிட்டு அழைத்த தொடங்கவே அவளது கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறான். மறுநாள் 6ம் திகதி சிறுமியின் உடலை யாருக்கும் தெரியாமல் ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்று பம்மல் அருகில், அனாகாப்புத்தூர் பகுதியில் உள்ள பற்றைக் காட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டிருக்கிறான். எரிந்த சிறுமியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் ஜஸ்வந்த்தைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.