அக்கரைப்பற்றில் 3 கோடி பெறுமதியான புகையிலைத்தூள் மீட்பு
Written By We Are Anonymous on Thursday, February 9, 2017
சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான புகையிலைத்தூளை மறைத்து வைத்திருந்த ஒருவருக்கு மதுவரித் திணைக்களத்தால் 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித் திணைக்களத்தின் அத்தியட்சகர் என்.சுசாதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று, கருங்கொடித்தீவு தபாலக வீதியை அண்டி அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 264 மூடைகளைக் கொண்ட புகையிலைத்தூளை புதன்கிழமை (8) தாம் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் ஒடிசா பகுதியிலிருந்து இந்த புகையிலைத்தூள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு, பீடி உற்பத்தியில் ஈடுபடும் மேற்படி நபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அக்கரைப்பற்றில் 3 கோடி பெறுமதியான புகையிலைத்தூள் மீட்பு
2017-02-09T10:24:00-08:00
We Are Anonymous
Local News|







