அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காரை வென்ற தொண்டமானின் காளை!
Written By We Are Anonymous on Friday, February 10, 2017
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்குப்பற்றிய ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை, கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளது. இந்தியாவின் அலங்காநல்லூர் வாடிவாசலில் இடம் பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில், ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளையும் பங்குப்பற்றி, பெறுமதிமிக்க கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக தடைபட்டிருந்த ஜல்லிக்கட்டானது, பெரும் போராட்டத்திற்கு மத்தியில், அரசினால் அங்கிககரிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமிருந்து, சுமார் 980 காளைகளும், 1487 காளைபிடி வீரர்களும் பங்குபற்றியுள்ளனர். அதில் 47 பேர் வரையில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காரை வென்ற தொண்டமானின் காளை!
2017-02-10T23:58:00-08:00
We Are Anonymous
India News|






