Total Pageviews

இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா?

Written By We Are Anonymous on Friday, February 17, 2017


இதைவிட கொடுமை எங்காவது நடக்குமா? தம்புள்ள பள்ளிவாசலுக்கு 20பேர்ச் காணிதான் தரமுடியும், கூறுபவர் சம்பிக்க ரணவக்க... அப்படியென்றால் மஹிந்த காலத்தில் ஒரு இஞ்சி நிலமும் விட்டுக்கொடுக்கமாட்டோம், இடம்பெயரவும் மாட்டோம் என்று கூப்பாடு போட்டவர்கள் எங்கே? மஹிந்த உங்களுக்கு விரும்பிய இடத்தில் அழகான பள்ளிவாசல் கட்டித்தறுகிறேன் என்றபோது, கடைசிவரையும் அதற்கு நாங்கள் உடன்படமாட்டோம் என்று கர்ஜித்த சிங்கங்கள் எங்கே? இதற்கெல்லாம் தீர்வு தறுவோம் என்று ஆட்சிக்கு வந்த நல்லரசாங்கம் பிச்சைபோட்டாலும் அதனை தலைகுனிந்தும், மறியாதையாகவும் வாங்குவதற்கு முயற்சிக்கின்றீர்களே, அப்படியென்றால்
ரோசம்,மானம்,மறியாதை எல்லாம் இந்த அரசாங்கம் வந்தவுடன் குறைந்து விட்டதா? கடந்த அரசாங்கத்தில் எடுத்தெற்கெல்லாம் ஜனாதிபதியை குற்றம் சாட்டிய நாம், இப்போது என்ன பிரச்சினை வந்தாலும் பிரதமரையோ, ஜனாதிபதியோ குற்றம் சாட்டுவதற்கும், அல்லது அவர்களிடம் பேசி தீர்வு காண்பதற்கும் தயங்குவது ஏன்? தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில், பிச்சைவேண்டாம் நாயை பிடி என்ற சீலத்துக்கு அந்த பள்ளிவாசல் நிர்வாகம் ஆளாகிவிட்டது, எங்களுக்கு 80 பேர்ச் காணிவேண்டும் அதுவும் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வேண்டும் என்று முஸ்லிம்களின் எதிரியான சம்பிக்கவிடம் கெஞ்சிக் கேட்கும் அளவுக்கு நிலமை போயுள்ளது.. கடந்த காலங்களில் இந்த விடயத்தை பெரிதாக தூக்கிப்படித்த அரசியல் வாதிகள் எங்கே? எல்லோரும் கைவிட்ட நிலையில் அந்த பள்ளிவாசல் நிர்வாகம் தடுமாறி தெறிகின்றார்கள்...இதனை கண்டுகொள்வதற்கு அரசியல் வாதிகள் தயங்குவது ஏன்? சரி வேறு இடத்தையாவது தாறுங்கள் என்று கேட்பதற்கு பிரதமரிடமோ, ஜனாதிபதியிடமோ நேரடியாக பேசி தீர்வு காண்பதை விட்டுவிட்டு, இனவாதியான ஞானசாரவின் தலைவன் சம்பி
க்கவின் மூலம் உண்மையான தீர்வு கிடைக்காது என்று தெறிந்தும், வேறுவழி இல்லாமல் பள்ளிநிர்வாகம் அநாதை போல் அவரிடம் அலைந்து தெறிவதை வாக்களித்த மக்களுக்கும் புரியவில்லையா? இந்த பள்ளி விடயத்தை வைத்து அரசியல் நடத்திய அரசியல் வாதிகளே..! ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நல்ல மரணம் உங்களுக்கு கிடைக்காது, நிச்சயமாக உங்களுக்கு பாரிய தண்டைனையை இறைவன் தறுவான்....

ஜெயலிதாவுக்கு நடந்த கதைதான் உங்களுக்கும் புரிந்து கொள்ளுங்கள்.... தம்புள்ள பள்ளிவிடயம் மட்டுமல்ல இன்னும் பல பிரச்சினைகள் இந்த நல்லாட்சியில் மறைக்கப்படுகிறது, இதனை மக்கள் தெறிந்தும் தெறியாதது போல் நடந்து கொள்வது ஆச்சரியமாகவே உள்ளது. ஆகவே நல்லாட்சி நமக்கு பொல்லு போட்ட ஆட்சியாக மாறிவிட்டது என்பதே உண்மையாகும்..... எம்.எச்.எம்.இப்ராஹிம் கல்முனை...
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.