முதல்வர் தெரிவு வாக்கெடுப்பில் கடும் அமளி. மேஜையின்மீது ஏறினார் பூங்கோதை. சபாநாயகர் நாற்காலி, மைக் உடைப்பு.
Written By We Are Anonymous on Saturday, February 18, 2017
தமிழக சட்டப்பேரவையில் இன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராமசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பேசினர். முதல் பிளாக்கில் வாக்கெடுப்பு நடந்தபோது 38 பேர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. ட்டப்பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜைமீது ஏறி அமளியில் ஈடுப்பட்டார். சபாநாயகரின் நாற்காலி, மைக் உடைக்கப்பட்டன. இதனால், அவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார். இதனிடையே, சட்டசபையில் தி.மு.க உறுப்பினர்கள், சபாநாயகர் நாற்காலி மற்றும் மைக்கை சேதப்படுத்தினர். மேலும், பேப்பர்களைக் கிழித்தும் சபாநாயகரை முற்றுகையிட்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபாநாயகர் தனபால் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, மதியம் ஒரு மணி வரை சட்டசபை சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அமளிக்கிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேர் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
முதல்வர் தெரிவு வாக்கெடுப்பில் கடும் அமளி. மேஜையின்மீது ஏறினார் பூங்கோதை. சபாநாயகர் நாற்காலி, மைக் உடைப்பு.
2017-02-18T00:42:00-08:00
We Are Anonymous
India News|






