Total Pageviews

ஐ.பி.எல். இல் மெத்தியூஸின் அதிகபட்ச அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா ?

Written By We Are Anonymous on Sunday, February 19, 2017

இலங்கை அணித் தலவர் அஞ்சலோ மெத்தியூஸின் அடிப்படை விலை அதிகபட்சமாக இந்திய ரூபா மதிப்பில் 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2 கோடியில் இருந்து அவரின் ஏல விலை ஆரம்பமாகவுள்ளது. 10 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் மே 21 திகி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெறவுள்ளது. இதையொட்டி 44 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 140 வீரர்கள் 8 அணிகளால் தக்க வைக்கப்பட்டனர். ஏனைய வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். அணிகளால் விடுவிக்கப்பட்டவர்கள், புதியவர்கள் என 130 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 357 வீரர்கள் இந்த முறை ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதில் 227 பேர் எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடாதவர்கள். . மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஏலம் விடுவதில் பிரசித்தி பெற்ற லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் மேட்லி வீரர்களுக்கான ஏலத்தை நடத்துகிறார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.