நாட்டில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம்
Written By We Are Anonymous on Sunday, February 19, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நெயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் 5 இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஐந்து இராணுவத்தினரிடமும் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளில் நாட்டில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை இந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவே முன்னெடுப்பதும், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை குறித்தும் இந்தக் குழு விசாரணை நடத்தி வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பில் பல தகவல்கள் அம்பலம்
2017-02-19T21:20:00-08:00
We Are Anonymous
Local News|





