Total Pageviews

அரிசி வகைகளுக்கான கட்டுப்பாட்டு விலைகள் வெளியாகின :

Written By We Are Anonymous on Saturday, February 18, 2017

இறக்குமதி மற்றும் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்படும் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி கிலோ ஒன்று 72 ரூபாவாகவும் உள்நாட்டு நாட்டரிசி கிலோ ஒன்று 80 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்படும் பச்சை அரிசி கிலோ ஒன்றுக்கு 70 ரூபாவாகவும் உள்நாட்டு பச்சை அரிசி கிலோ ஒன்று 78 ரூபாவாகவும் விற்பனைசெய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி கிலோ ஒன்று 80 ரூபாவாகவும் உள்நாட்டு சம்பா அரிசி கிலோ ஒன்று 90 ரூபாவாகவும் விற்பனை செய்யவதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரிசி விற்பனை தொடர்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெற்றால் 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.