Total Pageviews

அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம்

Written By We Are Anonymous on Sunday, February 5, 2017

சென்னை: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலாவின் பெயரை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். சென்னையில் நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வராக சசிகலா வரும் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார். சசிகலாவுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். சசிகலாவை புதிய முதல்வராக தேர்வு செய்தது பற்றி ஆளுநரிடம் அதிமுக கடிதம் வழங்க உள்ளனர். சசிகலாவின் வாழ்க்கை வரலாறு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள சசிகலா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர். 1976-ம் ஆண்டு சசிகலா, நடராஜன் திருமணம் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. மேலும் சசிகலாவுக்கு 1983-ல் ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின்னர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தோழியாக சசிகலா இருந்து வந்தார்.

Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.