Total Pageviews

சசிகலாவை தேர்வு ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு எதிரானது - மு.க. ஸ்டாலின் பேட்டி

Written By We Are Anonymous on Sunday, February 5, 2017

சசிகலாவை அதிமுகவினர் தேர்வு செய்தது ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு எதிரானது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.  திருவாரூர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். ஏற்கனவே திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் ஜெயலலிதா வீட்டில் உள்ளவர்கள் முதல்-அமைச்சராக தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என கூறியிருந்தார். அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து திருவாரூரில் பேட்டியளித்து பேசிய மு.க. ஸ்டாலின்; மக்கள் எண்ணத்திற்கு எதிராக அதிமுகவினர் செயல்பட்டு உள்ளனர். ஜெயலலிதா பதவி விலகியபோது பன்னீர் செல்வத்தை தான் முதல்-அமைச்சராக தேர்வு செய்தார். இப்போது சசிகலாவை அதிமுகவினர் தேர்வு செய்தது ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு எதிரானது, என்றார். ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், “சசிகலா தேர்தலில் வெற்றிபெறுவது சந்தேகம்தான்,” என்று கூறிஉள்ளார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.