ரவூப் ஹக்கீம் என்னைப் பின்தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து ‘ என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.
Written By We Are Anonymous on Tuesday, February 14, 2017
கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீட கூட்டத்திலிருந்து நான் வெளியேறியதும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னைப் பின்தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து ‘ என்னை மன்னித்து விடுங்கள். பல சந்தர்ப்பங்களில் நான் உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேன் என்றார். அரை மணித்தியாலம் அவரது முகத்தைப் பார்க்காமலே இருந்தேன். பின்பு லீடர் நீங்கள் திரும்புங்கள். நான் ஓய்வாக இருக்க விரும்புகிறேன் என அவரை அனுப்பி வைத்தேன்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், செயலாளர் பதவியுடன் தேசியப் பட்டியலில் உறுப்பினர் பதவியையும் தருவதாக பல தடவைகள் வாக்குறுதி வழங்கிய கட்சியின் தலைவர் என்னை ஏமாற்றிவிட்டார். கடந்த பேராளர் மாநாட்டின் நியமனங்களுடன் எனது 30 வருட அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. தவிசாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர்களால் என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விநயமாகக் கேட்கப்பட்டது. ஒருவரிடமிருந்து பறித்தெடுத்து தரும் பதவியை ஏற்றுக்கொள்ளும் வழிகெட்ட ஆள் நான் இல்லை எனக்கென்று தனித்துவம் உள்ளது. எனது தனித்துவத்தை எவருக்கும் அடகு வைக்க மாட்டேன். தவிசாளர் பதவியை கடைசிவரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றேன். சமூகத்தையும் கட்சியையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் என்ற துஆ கேட்கிறேன் என்றார். ( D C )
ரவூப் ஹக்கீம் என்னைப் பின்தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து ‘ என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.
2017-02-14T00:33:00-08:00
We Are Anonymous
Local News|






