சசிகலா உள்ளே செல்வதால் பன்னீர் செல்வம் அணியை எதிர்த்து சசிகலா சார்பில் முதல்வராக களமிறங்க உள்ளவர்கள் இவர்கள் தான்.
Written By We Are Anonymous on Tuesday, February 14, 2017
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 7-ந் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு கடந்த 6-ந் தேதி அறிவித்தது. அதன்படி, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று சசிகலா சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்தது. விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செயதது. இந்த நிலையில் இன்று காலை தீர்ப்பு வெளியான பிறகு கூவத்தூரில் கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். நேற்று இரவே, இப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கட்சியின் மூத்த உறுபொபினர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார் அதன் படி கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுகல்ல் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் பெயர் ஆகியோர் பெயர் ஆலோசிக்கபட்டு வருகிறது. கட்சியின் சார்பில் செங்கோட்டையன் முதல்வராக முன்னிறுத்தப்படும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
சசிகலா உள்ளே செல்வதால் பன்னீர் செல்வம் அணியை எதிர்த்து சசிகலா சார்பில் முதல்வராக களமிறங்க உள்ளவர்கள் இவர்கள் தான்.
2017-02-14T00:30:00-08:00
We Are Anonymous
India News|






