பன்னீர்செல்வம் ஒரு கோழை.. தமிழக முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர்.
Written By We Are Anonymous on Thursday, February 9, 2017
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா பின்னர், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராகவும் (முதல்-அமைச்சர்) தேர்ந்து எடுக்கப்பட்டதால், அவருக்கு வழிவிடும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் மாளிகையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். சசிகலா முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதமும் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது.ஆனால், முதல்-அமைச்சராக பதவி ஏற்குமாறு கவர்னரிடம் இருந்து சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு வரவில்லை. இதற்கிடையே, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி பேட்டி அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரை அ.தி.மு.க.வின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார். இதனால் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஆட்சியை பிடிப்பதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் கட்சியில் தங்களுக்கு ஆதரவை திரட்டும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பொறுப்பையும் சேர்த்து கவனிக்கும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவை, முதல் ஓ பன்னீர் செல்வம் சந்தித்தார். இதன்பின்னர் சசிகலாவும் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இத்தகைய பரபரப்பான சூழலில் பிபிசி இணையதளத்துக்கு பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி அளித்த பேட்டியில் ஓ பன்னிர்செல்வம் முதல் அமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் என்று தெரிவித்துள்ளார். தனது பேட்டியில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்ததாவது:- நிர்ப்பந்தத்துக்குப் பயந்து ராஜினாமா செய்திருந்தால், ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை , முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர். முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது , சட்டத்தில் அதற்கு இடமில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்
பன்னீர்செல்வம் ஒரு கோழை.. தமிழக முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர்.
2017-02-09T23:31:00-08:00
We Are Anonymous
India News|






