பௌத்த துறவியாக்கப்பட்ட முஸ்லிம் சிறுவன் யார்? இதோ வெளியானது உண்மைகள்.
Written By We Are Anonymous on Thursday, February 2, 2017
ஏழு வயதே நிரம்பிய முஹம்மத் அஸ்லம் எனும் முஸ்லிம் சிறுவன், பௌத்த மதத்துக்கு மாற்றப்பட்டு, பௌத்த துறவியாக்கப்பட்டுள்ள செய்தி, இப்போது மிகவும் சூடாகப் பேசப்படுகின்றது. இலங்கை போன்ற ஒரு பல்லின, பல்கலாசார நாட்டில், முஸ்லிம் சிறுபான்மையின் மத சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே இவ்வாறான சம்பவங்கள் அமைகின்றன. இரத்தினபுரியின் கஷ்டப் பிரதேசமொன்றைச் சேர்ந்த, 38 வயதான பிச்ச லெப்பே முஹம்மத் இஸ்மாஈல் எனும் முஸ்லிம் நபருக்கும், 35 வயதான கல்ஹேனகே ரேனுகா எனும் சிங்களப் பெண்ணுக்கும் பிறந்துள்ள முஹம்மத் அஸ்லம் என்ற சிறுவனே, தந்தையின் விருப்புடன் இவ்வாறு பௌத்த மதத்துக்கு மாற்றப்பட்டு, பௌத்த துறவியாக்கப்பட்டுள்ளார். கண்டி சித்திராலங்கார தேரரிடம் பௌத்த துறவியாகி, ரத்னபுரே ஸ்ரீசுதர்சனாலங்கார எனும் பெயரிடப்பட்டுள்ள, இந்த சிறுவன், இப்போது திம்புலாகல ஆரண்ய சேனாசனவில் பௌத்த கல்வி பெற்று வருகிறார். இப்போது பௌத்த துறவியாக்கப்பட்டுள்ள இந்த சிறுவனின் தாயார், சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று காணாமல் போயுள்ளதனாலும், பொருளாதார இடர்ப்பாடுகள் இருப்பதனாலுமே, முஹம்மத் அஸ்லம் எனும் சிறுவனை பௌத்த துறவியாக்குவதற்கு தான் தீர்மானித்ததாக, சிறுவனின் தந்தை சிங்கள ஊடகமொன்றிடம் கூறியுள்ளார். இந்த சிறுவனின் தந்தை ஊடகங்களின் தெரிவிக்கும்போது, “நான் முஸ்லிம். ஆனாலும், நான் பௌத்த மதத்தையே பின்றுபற்றுகிறேன். எனக்கு மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு செல்கிறார்கள். ஆனாலும், நான் பௌத்த மதத்தை நம்பி, அன்று முதல் பன்சலைக்குச் சென்று புத்தரை வணங்குகிறேன். இரத்தினபுரி பொத்குல் விகாரையில் சித்திரம் வரைவதற்கு நான் உதவினேன். “எனது பிள்ளையின் தாய், வெளிநாடு சென்றார். மகன் தனிமையாகினார். இரண்டு, மூன்று வருடங்கள் சிறுவர் காப்பகத்தில் வளர்ந்தார். பின்னர், வெலிகந்த அசேலபு பன்சலையின் பிரதான பிக்கு ஊடாக, மகனை திம்புலாகல பன்சலைக்கு ஒப்படைத்து துறவியாக்கினோம்.” என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்திலிருந்து முஸ்லிம் சமூகம் சில விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, இலங்கை போன்ற ஒரு பல்லின, பல்கலாசார சூழலில், முஸ்லிம் சமூகம், அதன் மார்க்கத்தையும், சமூகத்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின், சில தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். சில முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதற்கான காரணமாக, முஸ்லிம் அல்லாதோருடனான திருமணத் தொடர்பு அமைகின்றது. முஸ்லிம் பெற்றோர் ஆண்-பெண் வரையறை பேணி, தமது பிள்ளைகளை மார்க்க வரம்புகளுக்குட்பட்டு வளர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை -ஆண் பிள்ளைகளாயினும் சரி, பெண் பிள்ளைகளாயினும் சரி- மஹ்ரமல்லாதோருடன் அவசியமின்றி நெருங்கிப் பழகுவதற்கு அனுமதிக்கக்கூடாது. இப்போது சமூக ஊடகங்களின் ஊடாக எவரையும் மிகவும் இலகுவாக தொடர்புகொண்டு, நட்புக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதனால், பிள்ளைகள் குறித்து எப்போதும், மேலதிக அக்கறை வேண்டும். வறுமை இறை நிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் என்பது நபிமொழி. எனவே, வறுமையிலிருந்து முஸ்லிம்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான இரண்டு மூன்று அடிப்படை வழிமுறைகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது. ஒன்று, ஸகாத். இரண்டாவது, ஸதகா. மூன்றாவது கஃப்ஃபாரா. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, முஸ்லிம்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கான திட்டங்களை ஸகாத் கமிட்டிகளும், ஜம்இய்யதுல் உலமாவும், ஏனைய முஸ்லிம் சிவில் சமூக நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் வறுமை காரணமாக, வேறு மதங்களுக்குச் சென்று பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக, இஸ்லாத்தை விட்டுச் செல்வோரை குறைக்கலாம், முற்றாக இல்லாமலாக்கலா
பௌத்த துறவியாக்கப்பட்ட முஸ்லிம் சிறுவன் யார்? இதோ வெளியானது உண்மைகள்.
2017-02-02T21:48:00-08:00
We Are Anonymous
Local News|






