காமம் மட்டும் கண்களுக்கு தெரிந்திருந்தால்....சிந்தியுங்கள்
Written By We Are Anonymous on Saturday, February 11, 2017
பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் பார்வையில் எங்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரு யோனியும் மட்டும் தான் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உணர்ச்சி வசப்பட்டு கூட உங்களால் எங்களையொரு குழந்தையாக பார்க்கமுடியாது போன பின் உங்களுக்கெள்ளாம் உணர்ச்சியென்று ஒன்று உள்ளதா. காமம் மட்டுமே கண்களுக்கு தெரிந்திருந்தால் உங்கள் தாய் கூட பிரசவ அறையில் பிறரால் கற்பழிக்கப்பட்டிருப்பாள். உங்கள் ஆண்குறிகளின் வீரியம் தான் தவறு செய்ததாயிருந்தால் உங்கள் அக்காவும் தங்கையும் கூட பிறரால் கற்பழிக்கப்பட்டிருக்கலாம். உங்கள் வயது தான் தவறு செய்ததாயிருந்தால் உங்கள் மனைவி கூட மற்றவர்களால் கற்பழிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. உலகிலுள்ள எல்லாப் பெண்களும் உங்களைப் போன்றவர்களால் கற்பழிக்கப் பட்டுவிட்டால் ஆண்களென்ற நீங்களெல்லாம் வெறும் விலைமகன்களாகத் தான் வாழப்போகிறீர்களா? குட்-டச் பேட்- டச் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதை விட பெரியவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்களென்று குற்றவாளிகளுக்கு தண்டனை யென்று சிறைவாழ்வு கொடுக்காமல் அரபு நாடுகளைப்போன்று ஆண்மையை துண்டித்து விடுங்கள் நரம்புகள் புடைத்தேனும் உயிர்பிரியும் வலி உணரப்பட வேண்டும். மன்னிப்புகள் தொடருமாயின் எங்களைப்போன்ற ஹாஷினிகளும் சில நந்தினிகளும் பல நிர்பயாக்களும் முடிந்தவரை முஷ்கின் போன்றவர்களும் தொடரவே செய்வார்கள். இதைவாசிக்கும் அண்ணணோ அக்காவோ அம்மாவோ அப்பாவோ தம்பியோ தங்கையோ யாராக இருந்தாலும் இவர்களை தண்டிக்கச்சொல்லுங்கள் மன்னித்து விடுவதென்பது எங்களை போன்றவர்கள் மற்றொரு முறை கற்பழிக்கப்படுவதற்கு சமமாகும். #வரிகள் #வலித்திருந்தால் #உணர்ந்திருக்கிறீர்கள் #என்று#நம்புகிறேன்.
காமம் மட்டும் கண்களுக்கு தெரிந்திருந்தால்....சிந்தியுங்கள்
2017-02-11T07:08:00-08:00
We Are Anonymous
Local News|






