வெகு காலத்திற்கு பிறகு இங்கிலாந்து பத்திரிகைகளே " இங்கிலாந்து கிரிக்கட்டின் எதிர்காலம்" என வர்ணித்த ஆதில் ரஷீத். #Rash
Written By We Are Anonymous on Sunday, February 5, 2017
நேற்று Zero என்று அழைக்கப்பட்டவர். இன்று Hero என்று அழைக்கப்படும் ஒரு நபரைப் பற்றித் தெரியுமா? ஆம் அவர் வேரு யாரும் இல்லை. இங்கிலாந்தது கிரிகெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் #Adil_Rashid என்பவரே. தனது கண்ணி டெஸ்டை பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த வாரம் Abhu Dhabi யில் துவங்கினார். அவர் தனது முதலாவது இன்னிங்க்ஸ் இல் 34 ஓவர்ஸ்/ 0 Maidens/ 163 Runs/ 0 wickets என்று தனது திறமையற்ற ஒரு விளையாட்டை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்... இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. தொடர்ந்து விளையாடி தனது இரண்டாவது இன்னிங்க்ஸ் இல் 19 Overs/ 3 Maidens/ 64 Runs/ 5 wickets என்ற அடிப்படையில் தனது அதி திறமையை வெளிக்காட்டி, தோல்வியின் விளிம்பிளிருந்த இங்கிலாந்து அணியை Draw Match என்ற நிலைக்கு கொண்டுபோய் சேர்த்து இங்கிலாந்தை தோல்வியிலிருந்து காப்பாற்றினார். பொதுவாக இங்கிலாந்து பத்திரிகைகளில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட தகவல்கள் வருவது ரொம்பவே அரிதானது. அதற்க்குக் காரணம் இங்கே கால்ப்பந்து மற்றும் ரக்பி போன்ற விளையாட்டுகளுக்கே அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் இன்றைய எல்லா பத்திரிகைகளிலும் இவரைப் பற்றிய தகவல்களாகவே இருந்தன. இதில் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் ஒரு பத்திரிகை இவரை "The Future of England Cricket" என்ற வர்ணித்திருந்தது.
வெகு காலத்திற்கு பிறகு இங்கிலாந்து பத்திரிகைகளே " இங்கிலாந்து கிரிக்கட்டின் எதிர்காலம்" என வர்ணித்த ஆதில் ரஷீத். #Rash
2017-02-05T12:10:00-08:00
We Are Anonymous
Sports News|






