Total Pageviews

டெங்கு குற்றவாளிகளுக்கு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை

Written By Mihrajnews on Wednesday, July 19, 2017


டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக அவர்களின் பெயர்களிலேயே வழக்கு தொடரப்படும்

​மேலும், உள்நுழைவதற்கு கடினமான முறையில் மூடிக் காணப்படும் வீடுகள் மற்றும் சொத்துகளினுள் உள்நுழைந்து பரீட்சிப்பதற்கும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்ய இன்று (19) அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.