Total Pageviews

புகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை

Written By Mihrajnews on Wednesday, July 19, 2017


புகையற்ற புகையிலை பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தல் என்பன இன்று (19) முதல் தடை செய்யப்படுவதாக, தேசிய புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபை அறிவித்துள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபையின் சட்டத்துக்கு அமைவாக  இந்த தடை அமுலாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பொருட்டு மாவா, பாபுல், ஹான்ஸ், பான்பராக் மற்றும் குட்கா போன்ற புகையிலை உற்பத்தி பொருட்கள் மற்றும் விற்பனை தடை செய்யப்படுகிறது.

Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.