In the shadow of memories........
-------------------------------------------------------
#சமரசம்_உலாவும்_இடமே...........
*************************************
#கதிர்காமம்....." என்பது ஓர் ஊர்...நகரம்...இங்கு முஸ்லிம், தமிழ், சிங்கள...மூவினங்களுக்குமான புனிதஸ்த்தலங்கள் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்...நானும்,எனது குடுப்பத்தினர் சிலருடன் அண்மையில் அங்கு சென்றிருந்தேன்...இதற்குமுன்னரும் பலதடவைகள் சென்றிருக்கிறேன்....பள்ளிவாசலில் அன்றைய ளுஹர், அஸர் தொழுகைகளை நிறைவேற்றக் கிடைத்தமையை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்....
இறைநேசர்கள் பலரும் வந்து... தங்கியிருந்து....
சன்மார்க்கப் பணியாற்றிய சாந்தம் தவழுகின்ற ஓர் புனித இடமாகவே திகழ்கிறது....
வழமையைப்போல இந்தக் காலங்களில் பெரும்திரளான மக்கள்...பள்ளிவாசலிலும்...ஏனைய வணக்கஸ்த்தலங்களுக்கும் வருகைதந்து...தத்தமது சமயக் கிரியைகளை நிறைவேற்றிச் செல்கின்றனர்.....அன்றும் அவ்வாறே... இடம்பெற்றுக் கொண்டிருந்தன.....
எனினும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் அடர்ந்து வளர்ந்த மரங்களைக்கொண்ட சோலையாகக் காணப்பட்ட புனித தர்ஹா வளவுக்குள்.., சுற்றாடலுக்குள்...சகல இனமக்களும் ஒருவரோடொருவர் சிரித்துப்பேசி...தங்களின் அன்பினைப் பரிமாறி.... உண்பதும், உறங்குவதுமாக அன்றையப் பொழுதுகளை... அமைதியாக....ஆனந்தமாகக் கழித்துக் கொண்டிருந்ததை அறிய.., காணக்கூடியதாக இருந்தமை இந்த இடத்தின் விஷேட சிறப்பம்சமாகும்.......
மனிதர்கள்....ஏதோவொருவகையில்...ஒருவரோடொருவர் தங்கியும்....சார்ந்தும் வாழுகின்ற அமைப்பிலேயே....இறைவன் படைத்திருக்கிறான்....வழிவகுத்தும் தந்திருக்கிறான்.... ஒருவருடைய அல்லது ஒரு சமூகத்தாருடைய உரிமைகளை.., சலுகைகளை....கிடைப்பவற்றை....,மற்றுமொருவரோ...அல்லது மற்றைய சமூகங்களோ தட்டிப்பறிப்பதை...அத்துமீறுவதை...தடுப்பதை ஆளநினைப்பதை.., ஆள்வதை...அந்த இறைவனே தடுத்திருக்கிறான்....,வெறுத்திருக்கிறான்...! இதை மறந்துவிட்ட மனிதர்கள்.....தங்களது
அற்ப...சொற்ப சுகங்களுக்காக...இலாபங்களுக்காக.... தன்னையே மறந்து....தான்தோன்றித்தனமாக....தற்பெருமையோடு...அதர்மத்தில் ஈடுபட்டு...அப்பாவி மக்கள் மத்தியில் வீண் சந்தேகங்களையும்...குழப்பங்களையும்....குதர்க்கங்களையும் ஏற்படுத்தி....அவர்களின் வாழ்க்கையை...உயிர்களை அழிக்க முற்படுவது....அழிப்பது....எவ்வளவு கீழ்த்தரமான...பாவமான செயல்கள் என்பது ஏன் பலருக்குப் புரியமாட்டே னென்கிறது....?!
பட்டால் கூட இன்னும் பலருக்கு உறைக்கவில்லையே...?! ஒருநாள் வரும்...அப்போது புரியும்...! புரிந்தவர்போல் நடித்தவர்கள்... அனேகரது முகவரியையும்...இப்போது காணவில்லை...!!
மக்களில் பெரும்பகுதியினர் ஒற்றுமை..,ஐக்கியம்..,தன்னம்பிக்கையோடு...அச்சமின்றி.... வாழவே விரும்புகின்றனர்...அவரவருக்கு அவரவர் மார்க்கம்,மதங்கள்....கலாசாரங்கள்...,வழிமுறைகள்...! ஆனால்..., இடையில் புகுந்துகொள்ளும் இப்படியான சில மூதேவிகள்...காலத்துக்குக் காலம்...தங்களது சுயநலத்திற்காக போடுகின்ற ஆட்டங்களால்த்தான்...அப்பாவி மக்கள் ஒடிந்தும்....அழிந்தும் போய்க்கொண்டிருக்கிறார்கள்....ஒப்பாரிகளும் ஓய்ந்தபாடில்லை....இது ஆண்டவனின் உலகம்...இலங்கைப்பூமி......!.இதை சொந்தம் கொண்டாடுவதற்கு எவருக்கும்மே உரிமை கிடையாது....அவரவருக்கு அமைந்ததன் பிரகாரம் இருந்துவிட்டுப் போவதுதான்.....! எவரும் எவைகளையும் கிள்ளிக்கொண்டோ...,அள்ளிக்கொண்டோ போகவும் முடியாது....
உரியவர்களின் இருப்பிடத்தை.., இல்லங்களை.., இறைஇல்லங்களை.., உடமைகளை...உயிர்களை அழித்துவிட்டு....தங்களுக்குத்தான் சொந்தமென்று உரக்கக் கோசமிடும் பிணந்தின்னிகளே...,....! உங்களால் இயலுமென்றால்........
இந்த உலக உருண்டையில்... இந்த இலங்கை யின் மாங்காயில் ஒரு அங்குலத்தை...இல்லை..! ஒரு செ.மீற்றரை...கூட்டி...அல்லது குறைத்து படைத்துப் பாருங்கள்....ஓர் சுனாமிக்கு...,சூறாவளிக்கு...,நில நடுக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாத உங்கள் உடம்பை வைத்துக்கொண்டு...என்னபாடுதான் படுகிறீர்கள்...?! எவ்வளவுதான் பாடுகள் படுத்துகிறீர்கள்...?! முட்டாள்களே......! வெட்டிப்பேச்சுகளை விட்டுவிட்டு....மக்களை மக்களாக வாழவிடுங்கள்..........!!!
யாஅல்லாஹ்.......! மனித வேதாளங்களிடமிருந்து...எமது தேசத்தையும்..., நாட்டையும்....மக்களையும்....,எல்லாவகையிலும், எல்லாப் பக்கத்தாலும் நெருக்குதல்களுக் குள்ளாகும் எமது முஸ்லிம் உம்மத்துக்களையும்....பாதுகாப்பாயாக......!! ஏனையவர்களுக்கும்...சிந்திக்கின்ற ஆற்றலைக் கொடுத்து....சிறந்த மனநிலையை..., மனமாற்றத்தைக் கொடுத்தருள்வாயாக....!!!? ஆமீன்.....!!!
---------- Kalmunai Julfika Sheriff ---------
11/10/2017