Total Pageviews

சர்வதேச கடற்கரையோர சுத்தப்படுத்தும் வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் சிரமதான பணி – 2017.10.10 கல்முனைக்குடி கடற்கரைப் பிரதேசம்

Written By Mihrajnews on Wednesday, October 11, 2017

சர்வதேச கடற்கரையோர சுத்தப்படுத்தும் வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் சிரமதான பணி – 2017.10.10
கல்முனைக்குடி கடற்கரைப் பிரதேசம்

சர்வதேச கடற்கரையோர சுத்தப்படுத்தல் தினம் மற்றும் கடல்சார் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் நேற்று 2017.10.10 ஆம் திகதி கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கரையோர பிரதேசத்தையும் மற்றும் மருதமுனை கடற்கரை பிரதேசத்தையும் கல்முனை பிரதேச செயலாளர் ஜனாப். எம்.எச்.எம். கனி அவர்களின் தலைமையிலும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. கே. இராஜதுரை அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது. இவ் சுத்தப்படுத்தலின் போது கரையோரம் பேணல் திணைக்கள உத்தியோகத்தர் எம்.ஐ.எம். யசூர் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் கல்முனை மாநகர உழியர்களும் கலந்து கொண்டனர்.






Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.