Total Pageviews

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நாளை(21)முதல் வியாபார நடவடிக்கைகள்

Written By ADMIN on Monday, April 20, 2020



(சர்ஜுன் லாபீர்,யு.எல்.அலி. ஜமாயில்  , நூருள் ஹுதா உமர் )
                                                                          நாளை (21)செவ்வாய்கிழமையில் இருந்து கல்முனை பொதுச் சந்தையில் மரக்கறி சில்லறை வியாபாரங்கள் அனைத்தும் கல்முனை சந்தாங்கேணி பொது மைதானத்தில் நடைபெறும் என்பதோடு மொத்த வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் கல்முனை பொதுச்சந்தையில் காலை 8 மணி வரைக்கும் நடைபெறும்.என இன்று கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீம் தலைமையில் இடம்பெற்ற விசேட உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை பொதுச் சந்தையில் வழமையாக மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட எந்தவொரு வியாபரியும் சில்லரை வியாபாரங்கள் மேற்கொள்ள முடியாது எனவும் தீர்மானிகப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுனன் உட்பட பொலிஸ் அதிகாரிகள்,வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.என கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.