Total Pageviews

Written By ADMIN on Wednesday, April 8, 2020

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மொத்த வியாபாரிகளுக்கான விலைக்கட்டுப்பாடுகள் சம்மந்தமான தெளிவூட்டல்
==================================
சர்ஜுன் லாபீர்.  ,. யு.எல்.அலி. ஜமாயில்

கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட மொத்த வியாபாரிகளுக்கான விலைக்கட்டுப்பாடுகள் சம்மந்தமாக தெளிவூட்டும் உயர்மட்ட கூட்டம் இன்று(8)கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் நுகர்வோர் அதிகாரசபையினால் விதிக்கப்பட்ட விலைகளுக்கு அமைவாக பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், மொத்த வியாபாரிகளிடம் இருந்து பற்றுச்சீட்டு பெறாத எந்தவொரு சில்லறை வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்யமுடியாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் தங்களின் வியாபார தளங்களில் பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படல் வேண்டும் என்றும் நுகர்வோர் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களினால் மொத்த வியாபாரிகளுக்கு தெளிவூட்டல் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலத்தில் மொத்த,சில்லறை விற்பனையாளர்கள் நிர்ணய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யாவிட்டால் குறிந்த வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதோடு நீதிமன்றத்தில் வழக்குகளும் பதிவேற்றப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகரத்திற்கு உட்பட பிரதேச செயலாளர்கள்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.











Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.